Friday, November 22, 2024

மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின…

மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 15/11/2022  முதல் வகுப்புகள் தொடங்கின. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். 
சென்னை நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ, பல்மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் (ஆன்லைன்) நடத்தப்பட்டது. அரசு கல்லூரிகள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் இடங்கள் நிரப்பப்பட்டன. 
அந்த வகையில் கலந்தாய்வு மூலம் மருத்துவ படிப்பில்  இடங்கள் கிடைக்கப்பெற்ற மாணவ-மாணவிகள் அந்தந்த  மருத்துவ  கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம்  ஏற்கனவே  வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் 15-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
அதன்படி, தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிகளில்   சேர்ந்து   இருக்கின்றனர். அந்த கல்லூரிகளில்      முதலாம்      ஆண்டு       மாணவ-மாணவிகளுக்கான நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கின.   மிகுந்த உற்சாகத்துடன், கண்களில் கனவுகள் மின்ன மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்களை ஏற்கனவே அங்கு சேர்ந்து படித்து வருகிற மூத்த மாணவ,  மாணவிகள்  ரோஜாப்பூ கொடுத்தும், சந்தனப்பொட்டு  வைத்தும்  வரவேற்ற நிகழ்வு பல கல்லூரிகளில்   அரங்கேறியது.  சில கல்லூரிகளில் இனிப்புகளும்,   வாழ்த்து  அட்டைகளும்  வழங்கி வரவேற்றனர்.   மேலும்  கல்லூரி  முதல்வர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களும் இன்முகத்துடன் மாணவ-மாணவிகளை வரவேற்று மகிழ்ந்தனர்.

Latest article