மரக்கன்றுகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் ‘கிரீன் வேளச்சேரி’…

0
204

வேளச்சேரியை பசுமையாக்கும் முயற்சியில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, தண்ணீர் தேக்கி வைக்க மூன்று தொட்டிகள் கட்டப்படுகின்றன. வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடையே, மாநகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமாக காலி இடம் உள்ளது.

இந்த இடத்தை பசுமையாக்க, ‘கிரீன் வேளச்சேரி’ என்ற அமைப்பு முன்வந்தது. வேம்பு, புங்கை, நாவல், பலா, கொய்யா உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த 5,200 மரக்கன்றுகள் நட்டுள்ளனர். இதை தொடர்ந்து பராமரிக்க, கிரீன் வேளச்சேரி தன்னார்வலர்கள் முன்வந்தனர். தினமும், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர். தண்ணீர் அதிகம் தேவைப்படுவதால், மூன்று இடங்களில், தண்ணீர் தொட்டி கட்டுகின்றனர். இதில், நீரை தேக்கி, மரக்கன்றுகளுக்கு பயன்படுத்த முடிவு செய்து உள்ளனர்.