Tuesday, December 24, 2024

மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்…

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.,31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்   என   உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது  குறித்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகையை பெறும் தகுதி பெற்ற மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாதிரி    விண்ணப்பப்      படிவம், விண்ணப்பித்தலுக்கான   தகுதி   ஆகியவற்றை www.tndce.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest article