Tuesday, December 24, 2024

மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகரை எப்படி பிடித்து வழிப்பட வேண்டும்

ஆவணி மாதம் வந்துவிட்டது. ஆவணி   மாதத்தில்  அவதரித்த அற்புதமான பிள்ளையாக இருப்பவர்தான் பிள்ளையார். இந்த ஆவணி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று நாம் கூறுகிறோம். அதே போல் விநாயக சதுர்த்தியும் இதே ஆவணி மாதத்தில் தான் வரும். மாதா மாதம் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று நாம் விநாயகரை வழிபடாவிட்டாலும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளை நாம் மறவாமல் வழிப்பட வேண்டும். 
இவ்வாறு    நாம்   அவரை வழிப்பட்டால் அந்த வருடம் முழுவதும் அவரை வழிபட்டதற்குரிய பலனையும் நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட பிள்ளையாரை நாம் எந்தெந்த பொருட்களில் பிடித்து வைத்து வழிபட்டால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் அதனால் நம் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறும் என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நமக்கு உதவி செய்யும்.
பொதுவாக பிள்ளையார் என்றதும் அனைவரும் அவரை மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவார்கள். மிகவும் முக்கியமான யாகங்கள் நடக்கும் போது விநாயகரை சாணத்தில் பிடித்து வைத்து வழிபடுவார்கள்.  நாம் பிடித்து வைக்கும் அந்த பொருளுக்குரிய பலன் என்ன ஏன்பதை நாம் உணர்ந்து செய்ய வேண்டும். 
மஞ்சளில் விநாயகரை பிடித்து நாம் வழிபடுவதன் மூலம் நாம் எந்த காரியத்தை நினைத்து அவரை பிடிக்கிறோமோ அந்த காரியம்   வெற்றி அடையும்.   சகல சௌபாக்கியங்களும்     கிடைக்கும். குங்குமத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் நமக்கு இருக்க கூடிய செவ்வாய் தோஷங்கள்   அனைத்தும்   நீங்கும். குழந்தைகள்   இந்த    பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மிகவும் தூய்மையான மண்ணாக கருதப்படும் புற்று மண்ணில் பிள்ளையாரை பிடித்தோம் என்றால் உடலில் இருக்கக்கூடிய நோய்கள்   அகலும்.   வெல்லத்தில் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபட்டோம் என்றால் நாட்பட்ட தீராத நோய்களிலிருந்தும் நம்மை விநாயகர் விடுவிப்பார். 
உப்பில் பிள்ளையாரை பிடித்து நாம் வழிபட்டோம்   என்றால்   எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும். எருக்கன்   செடியின்   வேரிலிருந்து பிள்ளையாரை செய்து வழிபட்டால் நமக்கு இருக்கக்கூடிய தீவினைகள் அனைத்தும் அகலும். செல்வ செழிப்பு ஏற்படும். 
விபூதியால் பிள்ளையாரை பிடித்து வழிபட்டோம்   என்றால்    உடலில்   இருக்கும் நோய்கள்   தீரும்.   சுந்தனத்தால்  விநாயகரை பிடித்து வழிபட்டோம் என்றால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். சாணத்தால் பிள்ளையாரை பிடித்து வழிபடும் பொழுது சகலதோஷங்களும் விலகும். மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள்   விரைவில்   நடைபெறும். பசுமாட்டுச் சாணமாக இருக்க வேண்டும்.
வாழைப்பழத்தால் பிள்ளையாரை செய்து வழிபட்டால் வம்சம் விருத்தி ஏற்படும். வெண்ணையால் பிள்ளையாரை பிடித்து வழிபட்டால் கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். சர்க்கரையால்    பிள்ளையாரை   செய்து வழிபட்டால் உடலில் இருக்கக்கூடிய நோயின் வீரியம் குறையும். கல் பிள்ளையாரை செய்து வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும். மண் பிள்ளையாரை செய்து வழிபட்டால் சிறந்த வேலையும், உயர் பதவியும் கிடைக்கும்.  பிள்ளையாரை    நாம்  எந்த பொருளில் பிடிப்பதாக இருந்தாலும் சரி அந்த பொருளுடன்   பன்னீரையும்    சிறிது ஜவ்வாதையும் சேர்ந்து பிடித்தால் நமக்கு பரிபூரண பலனை விநாயகர் அருள்வார் என்பதை மறக்காதீர்கள்.
உங்கள்    வாழ்க்கைக்கு   என்ன தேவையோ அதற்கு ஏற்றார் போல் பிள்ளையாரை பிடித்து இந்த மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று அவரை வழிபட்டு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழுங்கள்.

Latest article