பொதுநலம் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமாக தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் …

0
194
மேதகு  ஆளுநர்  அவர்கள்  தமிழ்நாடு.  பொதுநலம் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமாக பத்தாண்டுகள் சிறப்பாக சேவை பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள் தனி அமைப்புளை கவுரவித்து விருதுகள் வழங்கி  சிறப்பிக்க உள்ளார்கள்.
மேற்கண்ட விருதுக்கு டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின்  சார்பாக உங்களின்  ஒத்துழைப்போடு  கடந்த  பத்தாண்டுகள்  செய்துள்ள பொதுநலபணி, சுற்றுச்சூழல் பணிகளின் விபரங்களை ஆண்டுவாரியாக பட்டியலிட்டு அதற்குண்டான புகைபடங்களையும் இனைத்து மனுவை பூர்த்தி  செய்து  அனுப்பி  உள்ளோம்.
வேளச்சேரியில்  பல  சங்கங்கள் இருந்தாலும் நமது சங்கத்தின் சார்பாக மேதகு ஆளுநர் அவர்களின் விருது கிடைக்க வேண்டி முதல் சங்கமாக நமது சங்கத்தின்  செயல்பாடுகளை பட்டியலிட்டு அனுப்பும் தகுதியில் நமது சங்கம் இருப்பது  பெருமைக்குறியாதாக கருதுகின்றேன்.
மேற்கண்ட பணிகளை செய்ய எங்களுக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்து உதவிய உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
விருதுகிடைக்க  வேண்டியும்  சங்கத்தை பாராட்டியும் எனது செயல்பாடுகள் குறித்தும் கடிதம் வழங்கிய திரு.பஷீர் அகமது IAS திரு.ராமாநாதன் IAS திரு.டால்பின் ஸ்ரீதர் மாவட்ட துணைதலைவர் BJP திருமதி.கவிதா  தயா  இன்டர்நேஷனல்  பள்ளி  தாளாளர்   புனித அந்தோனியார்    மேல்நிலை   பள்ளி   தலைமை    ஆசிரியை சாகோதரி.மரிய ஜோதி  தொடக்கப்   பள்ளி  தலைமை ஆசிரியை சகோதரி.லூர்து அமலி மற்றும் இரண்டு நாட்கள் இந்த பணிக்காக எனக்கு உதவிய பள்ளியின் உதவியாளர் மனோ மேடம் Reference வழங்கிய திரு.V.S.ராகவன்  செயலாளர்  வேதஸ்ரி  இந்து தர்ம பரிபாலன அறக்கட்டளை. Dr.A.சிவசுப்ரமணியம் SGS அறக்கட்டளை சச்சிதாநந்த ஆசிரமம் திரு.S.சுந்தராஜன் SG People Trust தாளாளர்
இவர்கள்  அனைவருக்கும்  சங்கத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும்  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் சங்கத்தின்    தலைவர்,   துணைதலைவர்,  பொருளாளர் இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்த உறுப்பினர்கள்    அனைவருக்கும்    மனமார்ந்த    நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.பாலகிருஷ்ணன்
பொதுசெயலாளர்
டான்சிநகர் நலவாழ்வு சங்கம்.