பெருங்குடி ஏரியில் கழிவு நீர் கலப்பும், ஆகாய தாமரையும்…

0
90

அடையாறு மண்டலம், 180வது வார்டு, பெருங்குடி ரயில் நிலையம் அருகில், 2 ஏக்கர் பரப்பு உடைய, கல்லுக்குட்டை ஏரி உள்ளது. சுற்றுவட்டார பகுதிமக்களின், நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

ஏரியில், கழிவு நீர் கலப்பு முன்பை விட அதிகரித்துள்ளது. பல நாட்கள், குடிநீர் வாரியமே, அடைப்பு குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, வடிகால் வழியாக ஏரியில் விடுகிறது. இதனால், ஏரி நீர் மாசடைகிறது.

ஏரி முழுவதும், ஆகாய தாமரை படர்ந்துள்ளதால், கொசுப்புழு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். ஏரி நீரை பாதுகாக்க ஆகாய தாமரையை அகற்றி, கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.