பூச்செடி, ஓவியங்களால் அழகாகிறது வேளச்சேரி மேம்பாலம் கீழ் பகுதி…

0
157

வேளச்சேரியில், இரண்டடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள காலி இடத்தில் பூச்செடிகள் நட்டு, தூண்களில் ஓவியம் வரைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்புடன் திட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு நமக்கு நாமே திட்டம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள நலச் சங்கங்கள், தன்னார்வள அமைப்புகள், வியாபாரிகளுடன் இணைந்து, சென்னை மாநகராட்சி இந்த பணியை மேற்கொள்கிறது. வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தில், ஒரு அடுக்கு மேம்பாலம் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. பாலத்தின் கீழ், ஒவ்வொரு தூண்களுக்கு இடையில், 70 அடி நீளம் மற்றும் 8 முதல் 25 அடி வரை அகலத்தில் காலி இடம் உள்ளன. இந்த காலி இடத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், பூச்செடிகள் நட்டு, தூண்களில் ஓவியம் வரைய முடிவு செய்யப்பட்டது.

பூச்செடிகள் நட்டு பராமரிக்கும் பணியை, “பசுமை வேளச்சேரி” அறக்கட்டளை செய!கிறது. கண்கவர் ஓவியம் வரையும் பணியை, “கை கோர்ப்போம்” என்ற அமைப்பு செய்ய உள்ளது. 18ஆம் தேதி செவ்வாய் அன்று செம்பருத்தி, அரளி போன்ற பூச்செடிகள் நடப்பட்டன.

ஒவ்வொரு செடியும், 2 அடி இடைவெளியில் நடப்பட்டுள்ளன. 10 நாட்களுக்குள், ஓவியம் வரைய முடிவு செய்துள்ளனர். இதன் மூலம், காலி இடம் பசுமையாவதுடன், தூண்களில் போஸ்டர் ஒட்டி நாசப்படுத்துவது தடுக்கப்படும்.