புத்திர பாக்கியம் விரைவில் பெறுவதற்கு விநாயகரை இந்த முறையில் வழிபட வேண்டும்…

0
235
	எத்தனை கோடி செல்வங்கள் இருந்தாலும் குழந்தை செல்வம் என்ற ஒன்று இல்லை என்றால் அந்த தம்பதிகள் பரம ஏழைக்கு சமமாக கருதப்படுவார்கள். எந்த செல்வத்தாலும் ஈடு செய்ய முடியாத ஒரு செல்வமே குழந்தை செல்வம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் புத்திர பாக்கியம் பெற விநாயகரை வழிபடும் முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். 

	குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தப்படுபவர்கள் தங்கள் வருத்தத்தை நிவர்த்தி செய்வதற்காக பல வழிகளைப் பின்பற்றுவார்கள். பல வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள்.     யுாகங்கள் செய்வதாக இருந்தாலும் சரி ஹோ மங்கள் செய்வதாக   இருந்தாலும்   சரி, அனைத்தையும்   முயற்சி   செய்து பார்ப்பார்கள். இப்படி செலவு செய்வதற்கு பதிலாக தம்பதிகள் இருவரும் விநாயகரை முறையாக வழிபட்டாலே குழந்தை பாக்கியம் என்பது நிச்சயம் கிடைக்கும்.

	எந்த தம்பதிகளுக்கு ராகுவால் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது அந்த தம்பதிகளுக்கு தான் குழந்தை செல்வம் கிடைப்பதில் தாமதங்களும் தடைகளும்      ஏற்படும்     என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ராகுவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை நீக்குவதற்கு நமக்கு உறுதுணை புரிபவர் விநாயகப் பெருமான் மட்டுமே. 

	அதனால்    தான்   அன்றைய காலத்தில்   குழந்தை   செல்வம் இல்லாதவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து 108 முறை வலம் வந்து வேண்டுதலை      வைப்பார்கள். விடியற்காலையில் ஈரத் துணியுடன் இவ்வாறு அரச மரத்தை சுற்றி வரும் பொழுது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக   இருந்தாலும்  சரி அவர்களுக்கு தடைப்பட்டு இருக்கும் குழந்தை பாக்கியம் என்பது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்து விரைவிலேயே குழந்தை பேரு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

	இதுவும் ஒரு வகையில் குழந்தை பாக்கியம் பெறுவதற்குரிய வழிதான் என்றாலும் இன்றைய காலகட்டத்தில் பலராலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் பிள்ளையார்பட்டியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை தம்பதி சகித்தமாக சென்று வழிபட வேண்டும். 
	அப்படி வழிபடும் பொழுது விநாயகருக்கு உகந்த அருகம்புல் மாலையை வாங்கி தர வேண்டும். அடுத்ததாக விபூதியை தானமாக கோவிலுக்கு வழங்க வேண்டும். உங்களால் எந்த அளவுக்கு விபூதியை வாங்கித் தர முடியுமோ அந்த அளவுக்கு வாங்கி தர வேண்டும். அடுத்ததாக ஏழு அரச இலைகளை பறித்து அதன் மேல் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து விநாயகப் பெருமானை மனம் உருக வழிபட்டு வரவேண்டும். 

	இப்படி வழிபட்டு வந்த பிறகு அங்கு தரக்கூடிய   விபூதியை  பிரசாதமாக நினைத்து  தினமும்   கணவனும் மனைவியும்   உட்கொண்டு   வந்தால் விரைவிலேயே அவர்களுக்கு விநாயகப் பெருமானின்   அருளால்  குழந்தை பாக்கியம் என்பது நிச்சயம் கிடைக்கும்.
	
	இதோடு  மட்டுமல்லாமல்  தகுந்த மருத்துவ ஆலோசனைகளையும் பெற்று உணவு ரீதியாக நல்ல ஆரோக்கியமான உணவுகளையும்  எடுத்துக்  கொண்டு வந்தால் விரைவிலேயே குழந்தை செல்வம் என்பது கிடைக்கும்.