Monday, December 23, 2024

பிறந்தாச்சு செப்டம்பர் 1… உயர்த்தியாச்சு சிலிண்டர் விலை…

எண்ணெய்  நிறுவனங்கள் மாதந்தோறும் சர்வசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளை மாறியமைக்கும். அந்த வகையில் செப்டம்பர் 1-ந்தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை  மட்டும்  உயர்த்தி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.       பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50ஆக நீடிக்கிறது.

ஆனால், 19 கிலோ எடை கொண்ட     வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855-க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் ரூ.7.50 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.38 உயர்ந்துள்ளதால் வணிகர்கள்     அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து 167-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு    வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும்,  டீசல் 92.34 ரூபாய்க்கும்     விற்பனை செய்யப்படுகிறது.

Latest article