பிச்சாவரம், பள்ளிக்கணை, கரிக்கிலிக்கு கிடைத்தது சர்வதேச அங்கீகாரம்…

0
142

தமிழகத்தில்,சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்தி காடுகுள், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை, சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை, 49 இடங்கள் சர்வதேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படும் புதிய இடங்கள்குறித்த பட்டியலை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று வெளியிட்டார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கடலூர் மாவட்டம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள், செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதையடுத்து, சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழக பகுதிகளின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்:-
சென்னையில், வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரையிலான, 1,482 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், 190 வகை பறவைகள் வந்து செல்கின்றன.