பாதை ஓரத்தில் தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை…

0
142

கிண்டி பஸ் நிலைய சாலை சுரங்கப்பாதை வாயிலில் இருந்து, ரயில் நிலையம் வரை புதிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை தரைமட்டத்திலிருந்து, ஒன்றே கால் அடி உயரமாக கட்டப்பட்டுள்ளது.

நடைபாதை ஓரத்தில் நடப்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் கவனக்குறைவாக தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே, பாதை ஓரத்தில் பாதுகாப்பு தடுப்பு கம்பி அமைக்க வேண்டும். மேலும், நடைபாதை சிறு கடை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.