பள்ளிக்கரணையில் 9 மணி நேரம் மின்தடை…

0
159

பள்ளிக்கரணையில், மின் பராமரிப்பு பணிகள் நிறைவடைய காலதாமதம் ஏற்பட்டதால், 9 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இன்றி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை, பள்ளிக்கரணை சுற்று வட்டாரப் பகுதியில் வியாழன் கிழமை அன்று மின் பராமரிப்பு பணி நடந்தது.


பள்ளிக்கரணை துணை மின் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு முறை தீ விபத்து காரணமாக பாதிப்பு அதிகம் இருந்தது. இதையடுத்து, வியாழன் அன்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய பராமரிப்பு பணிகள் முடிக்க இரவு, 7:30 மணி ஆனது.

பின், ஒவ்வொரு பகுதிக்காக மின் இணைப்பு வழங்கப்பட்டது. பள்ளிக்கரணை சுற்று வட்டார பகுதியில், 9 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லாததால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.