Tuesday, December 24, 2024

பள்ளிக்கரணையில் வலசை பறவை வருகை அதிகரிப்பு…

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, வழக்கத்தைவிட முன்கூட்டியே வலசை பறவைகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குவிய துவங்கியுள்ளன.
சென்னை வேளச்சேரி முதல், மேடவாக்கம்   வரையிலான பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி, வனத்துறை பாதுகாப்பில் உள்ளது.  வடக்கு ஆசியா நாடான சைபீரியா உள்ளிட்ட  நாடுகளில்  குளிர்  காலம் துவங்கும்    போது,  அங்குள்ள பறவைகள் தெற்கு நோக்கி வரும்.
இதில் இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான  பறவைகள், தமிழகத்துக்கு வருவது வழக்கம். அந்த  வகையில்,  திருவள்ளுர் மாவட்டம்  பழவேற்காடுக்கு அடுத்தபடியாக, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகள் முகாமிடுவது வழக்கம்.
ஆண்டு      தோறும், அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் இங்கு வரும் பறவைகள், மார்ச், ஏப்ரல் வரை இங்கு தங்கும். இதில், கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவ மழைக்கு முந்தைய மாதங்களில், இங்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைப்பொழிவு காணப்படுகிறது.
இதுனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், அனைத்து வகை பறவைகளுக்கும் ஏற்ற சூழல் நிலவுகிறது. இதுன் காரணமாக, வலசை பறவைகள் முன்கூட்டியே வரத்துவங்கி உள்ளன.
இந்நிலையில், நடப்பாண்டில்ஆகஸ்ட் மாத இறுதியிலேயே வலசை பறவைகள்  வரத்துவங்கின. தற்போதைய      நிலவரப்படி, உள்ளான்கள்,        வாத்துகள், வல்லூறுகள் என, 16 வகையைச் சேர்ந்த   வலசை  பறவைகள், பள்ளிக்கரணையில் முகாமிட்டுள்ளது கணக்கெடுப்பு வாயிலாக தெரிய வந்துள்ளன.
வனத்துறை ஒத்துழைப்புடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகள்  கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.    இஞ்கு, வடகிழக்கு பருவ மழை துவங்கிய பின், நீர்மட்டம் அதிகரிக்கும் போது தான், வலசை பறவைகள் அதிகமாக வரும். இந்தாண்டு பருவ மழைக்கு முன், அவ்வப்போது மழை பெய்வதால், மண் கொத்தி, பொரி மண் கொத்தி, பச்சை மண் கொத்தி, சேற்றுபூனை பருந்து    உள்ளிட்ட    பறவைகள் முகாமிட்டு    உள்ளன.  தற்போது, உலகின் அதிக வேகத்தில் பறக்கும் 'பெரிய ராசாளி'      வந்திருப்பது, அனைவரின்       கவனத்தையும் ஈர்ப்பதாக     அமைந்துள்ளது.

Latest article