Monday, December 23, 2024

பலாப்பழ பாயாசம்!

தேவையான பொருட்கள்:

கனிந்த பலாப்பழ துண்டுகள் – 12
வெல்லம் – 1/2 கப்
தண்ணீர் 1/4 கப்
கெட்டியாக தேங்காய் பால் – 3/4 கப்
நெய் – 3 டீஸ்பூன்
முந்திரி – சிறிது
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

செய்முறை:

  • முதலில் பலாப்பழத்தை குக்கரில் போட்டு, அதில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் குக்கரில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, அதனை அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு வாணலியில் வெல்ல நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதித்த பின் அரைத்து வைத்துள்ள பலாப்பழத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • பாயாசமானது ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் மற்றும் தேங்காய் பாலை ஊற்றி ஒருமுறை கிளறி இறக்கி விட வேண்டும்.
  • இறுதியாக அதில் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால், சுவையான பலாப்பழ பாயாசம் தயார்.

Latest article