பயன்பாட்டுக்கு வரும் வேளச்சேரி சுரங்கப்பாதை…

0
197

வேளச்சேரி ரயில்வே சுரங்க பாதை, 10 ஆண்டுகளுக்குப் பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவுள்ளது. இதன் மூலம், வேளச்சேரி மக்களின் போக்குவரத்து பிரச்சனைக்கு மேலும் ஒரு தீர்வு கிடைக்கும் என, பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வேளச்சேரி மேம்பால ரயில் நிலையம், 2007ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ரயில் நிலையத்தின் தெற்கு பகுதியில், பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் இருந்து, தெற்கு பகுதிக்கு செல்லும் வகையில், 2011ஆம் ஆண்டு, ரயில் தண்டவாளத்தின் கீழ், இருவழி பாதை சுரங்கபாதை கட்டப்பட்டது. இதில், நடைபாதையும்

உள்ளது. பேருந்து நிலையம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டதால், சுரங்கபாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி, நீச்சல் குளம்போல் காட்சி அளித்தது. வேளச்சேரி மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அதை போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், 10 ஆண்டுக்கு பின் இந்த சுரங்கபாதையை பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறந்து விட, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம், வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கத்திற்கு நேரடி பேருந்து வசதி விட முடியும் என்பதால், சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கை

பாராட்டுக்குரியது. தரமணி, வேளச்சேரியில் இருந்து, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் நோக்கி எளிதாக செல்ல, இந்த சுரங்கபாதை பயன்படும். வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும். அங்கு, போக்குவரத்து தடைபட்டால், மாற்று பாதையாக இந்த சுரங்கபாதை இருக்கும் என தெரிவித்தனர்.

எஸ்.குமாரராஜா, தலைவர், அவர்கள் அன்னை இந்திராநகர் குடியிருப்போர் நலச்சங்கம், வேளச்சேரி. கடந்த மாதம், சுரங்கபாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான, பராமரிப்பு பணிகள் செய்தோம். ஆனால் மழையால், தடைபட்டது. எனவே இம்மாத இறுதிக்குள், சுரங்கபாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். மழைநீர் தேங்காமல் இருக்க, மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. என தலைவர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.