பப்பாளி கூட்டு!

0
120

தேவையான பொருட்கள்:

பழுக்காத பப்பாளி – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
கடலைப்பருப்பு – 3/4 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 3/4 கப்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

  • முதலில் கடலைப்பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, கடலைப்பருப்பை கழுவிப் போட்டு, 15-20 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு ஓரளவு வெந்ததும், அதில் பப்பாளியை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, பப்பாளியுடன் சேர்த்து நன்கு பிரட்டி, 5-8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
  • அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பப்பாளி கலவையுடன் சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான பப்பாளி கூட்டு ரெடி.