Tuesday, December 24, 2024

நூல் வெளியீட்டு விழா…

சென்னை வேளச்சேரி குரு நானக் கலையரங்கத்தில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவி எழுத்தாளர் ஹாசினி லட்சுமிநாராயணன், இவர் பதினான்கு வயது நிரம்பிய இளம் எழுத்தாளர் ஆவார். இவரது இரண்டாவது புத்தகமான Whizz Kidz (Lessons from Little Legends). இந்நூலில் இளம் வயதில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்த இருபது சாதனையாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் திருமிகு. நந்தகுமார் IRS அவர்கள் பங்கேற்றார். மேலும் எழுத்தாளர் ஹாசினி லட்சுமிநாராயணன், குரு நானக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் திருமிகு. மஞ்சித் சிங் நய்யார், எத்திராஜ் கல்லூரி தலைவர் திருமிகு. வி.எம். முரளிதரன், திருமிகு. குமரவேல், எமரால் பதிப்பகம் திருமிகு. ஒளிவண்ணன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.கடந்த ஆண்டு சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட முதல் புத்தகத்தின் தொடர்ச்சியாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலில் உள்ள சாதனையாளர்கள் கல்வி, விளையாட்டு, தொழில்முனைவோர் முதலான துறைகளில் சிறப்பான சாதனை நிகழ்த்திய இருபது சாதனையாளர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சாதனையாளர்கள் மட்டுமல்லாமல் சமூகத்தில் தன்னுடைய தனித்திறமையால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் ஆவர். இந்நூலின் ஆசிரியர் ஹாசினி லட்சுமிநாராயணன் இளம் வயது மாணவி மட்டுமல்ல. தமிழ்நாடு அரசின் ICDS அமைப்பின் இளம் ஊட்டச்சத்து தூதுவர், TEDX பேச்சாளர், ஃபிரிலான்ஸ் எழுத்தாளர் ஆவார். இவரது பணிகளை இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி மாண்புமிகு. வெங்கையா நாயுடு, தமிழ்நாட்டின் ஆளுநர் திருமிகு. ஆர்.என். ரவி பாராட்டியுள்ளனர். மேலும் புதுச்சேரி அரசு ஆளுநர், தமிழக முதல்வர் பாராட்டியுள்ளனர். இவரது சிறப்பான பணிகளை அரசு மற்றும் தலைச்சிறந்த தலைவர்கள் பாராட்டியுள்ளனர். “இளம் சாதனையாளர்களின் கதைகளை எனது விஸ் கிட்ஸ் புத்தகத்தின் மூலம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த குழந்தைகள் சமூகத்தில் உள்ள பிற குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறாரகள். அவர்களுடைய கதைகள் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும் எனும் நோக்கத்தில் என்னுடைய புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது. மேலும் இச்சாதனையாளர்களின் கனவகளைப் பின்பற்றி மிகப்பெரிய செயல்களில் வெற்றி பெறுங்கள்” என எழுத்தாளர் ஹாசினி லட்சுமிநாராயணன் குறிப்பிடுகிறார்.


இந்நூலின் சிறப்புகளை இளம் வாசகர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் எமரால்டு பதிப்பகம் எழுத்தாளர் ஹாசினி லட்சுமிநாராயணன் இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளது. இந்நூல்கள் பல்வேறு பதிப்பகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது.


நூல் தொடர்பான விவரங்களுக்கு, எழுத்தாளர் ஹாசினி லட்சுமிநாராயணன்
E-mail : slakshminarayanan@gmail.com

தொலைபேசி : 9841244500

Latest article