Sunday, December 22, 2024

நிலைவாசலில் கவனிக்க வேண்டியவை…

ஒரு மனிதனுடைய உடலுக்கு முகம் எப்படி பிரதானமானதோ, அதைப் போல தான் ஒரு வீட்டிற்கு நிலை வாசலும் முக்கியமானது. நம்முடைய முக தோற்றத்தை வைத்து நம்மை பற்றி கணித்து விடலாம். அது போல தான் ஒரு வீட்டின் முகப்பு தோற்றத்தை வைத்து அந்த வீட்டில் இருக்கக் கூடிய சூழ்நிலையை கணித்து விடலாம். 

ஆகையால் தான் நிலை வாசலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் பார்க்க மங்களகரமாக இருக்க வேண்டும் என நிலை வாசலுக்கு சாஸ்திர சம்பிரதாயங்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். அதில் சில பொருட்கள் நிலை வாசலில் இருந்தால் மகாலட்சுமி தாயார் வருவார் என்றும், சில பொருட்கள் இருந்தால் வரமாட்டார் என்றும் ஐதீகம் உண்டு. அவற்றைப் பற்றி தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் வர நிலை வாசலில் இருக்கக் கூடாது 

நிலை வாசலில் இருக்கக் கூடாத பொருட்களின்   முக்கியமானதாக கருதப்படுவது    அகோரமான தெய்வங்களின் அல்லது வேறு விதமான புகைப்படங்களை மாற்றக் கூடாது என்பது தான். ஒரு வீட்டிற்குள் நுழையும் போது பார்க்க மங்களகரமாக இருக்க வேண்டுமே அன்றி மனதை அச்சுறுத்தும் வகையிலான எந்த புகைப்படத்தையும் வைக்கக் கூடாது. 

அடுத்து நிலை வாசல் கதவு வீட்டின்  முகப்பு  வாசல்  சுவர் போன்றவற்றின் விரிசல் அல்லது சுவர்களில் அடித்திருக்கும் சுண்ணாம்பு உதிர்ந்திருந்தாலும் முதலில் அதை சரி செய்து விட வேண்டும். இப்படி இருந்தாலும் வீட்டிற்குள் சுபிக்க்ஷம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. அதைப் போல் தான் நிலை வாசல், கதவு நிலை வாசல் முன் இருக்கும் ஜன்னல் இரும்பு போன்றவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனே அதை சரி செய்து விட வேண்டும்.

நிலை வாசலில் காலணிகள் துடைப்பம் போன்றவற்றை வைக்கக் கூடாது. இது அனைவருக்கும் தெரிந்தது தான் அதே போல் நிலை வாசலில் இப்போது எல்லாம் மின் விளக்குகள் பொருத்தி இருக்கிறார்கள். அது பழுதானாலும் உடனே மாற்ற வேண்டும் இல்லையெனில் அப்புறப்படுத்தி விடுங்கள். எப்போதும் பழுதான அல்லது வேலை செய்யாத எந்த பொருளும் நிலை வாசலில் இருக்க கூடாது. அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டியது நிலை வாசலில் வைக்கும் செடி. இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு செடி வைத்து வளர்க்கிறார்கள். அந்த செடி வாடி இருந்தாலும் கருகி இருந்தாலும் உடனே இதை அப்புறப்படுத்தி விட வேண்டும். இது போல இருந்தால் இது வீட்டிற்கு பெரும் துன்பத்தைத்    தரும்  என்று சொல்லப்படுகிறது.

அத்துடன் நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து மாலை வேளையில் விளக்கு    வைத்து   அல்லது  மின் விளக்கை போட்டு வைக்க வேண்டும்.நிலை வாசலையும் வீட்டில் முகப்பையும் இந்த முறையில் நாம் பராமரித்தாலே   மகாலட்சுமி   தாயானவர் நித்தமும்  நம் வீட்டில் தங்கி நமக்கு அருள் புரிவார்    என்று சொல்லப்படுகிறது. இந்த   பதிவில் உள்ள தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் பின்பற்றி தாயாரின் அனுகிரகத்தை பெறலாம்.

Latest article