நாட்டு நலப்பணி திட்டம் – மெகா இரத்ததான சிறப்பு முகாம்…

0
193

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியின் பொன் விழா ஆண்டு முன்னிட்டு மெகா இரத்ததான சிறப்பு முகாம் 08.04.2022 அன்று நடைபெற்றது. இம்முகாமை கல்லூரி முதல்வர் டாக்டர் மா.கு.இரகுநாதன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையின் இரத்த வங்கி அலுவலர் டாக்டர். தமிழ்மணி, மாநில நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் டாக்டர்.எம்.செந்தில் குமார் பங்கேற்றனர். சென்னை இராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமாந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, எழும்பூர் ஐஓஜி மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை முதலான மருத்துவமனைகளில் இயங்கும் இரத்த வங்கிகளுக்கு 1214 யூனிட் இரத்தம் குரு நானக் கல்லூரி மாணவர்கள் வழங்கினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.