Monday, December 23, 2024

நல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள்!

  • வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க நாம் இந்த ஆன்மீக குறிப்புகளை பின்பற்றுவது சாலச்சிறந்தது
  • வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
  • சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
  • தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப் பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
  • பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால் பசுக்களிடம் குபேரன் குடி கொண்டிருக்கிறான் கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
  • காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப்படம் இவற்றை பார்ப்பது நல்லது.
  • தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். அணைப்பது என்ற வார்த்தை சொல்லகூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

Latest article