தேங்காய் பால் ரசம்

0
179

தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
நீர் போன்ற தேங்காய் பால் – 2 கப்
கெட்டி தேங்காய் பால் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1ஃ4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1ஃ4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு:
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1
வரமிளகாய் – 1
நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு:
மிளகு – 1ஃ2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1ஃ2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 3 பல்

செய்முறை:

முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நன்கு கனிந்த தக்காளி மற்றும் புளியை சேர்த்து, கையால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
பின்பு அதில் 2 கப் தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், பெருங்காயத் தூள்,கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள மிளகு சீரக விழுது, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் கலந்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஊற்றி கிளறி, மேலே நுரை கட்ட ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும். (ரசம் கொதித்துவிடக்கூடாது)
இறுதியாக கெட்டி தேங்காய் பாலை ஊற்றி கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பொள்ளாச்சி தேங்காய் பால் ரசம் தயார்.