தெருவிளக்கு இல்லாததால் இரவில் பயன்படாத சாலை…

0
169

சென்னை வேளச்சேரி – தரமணி ரயில்வே சாலை, கடந்த வாரம் திறப்பு விழா இன்றி பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், உள்ளகரம், வேளச்சேரியிலிருந்து, இந்த சாலை வழியாக தரமணி, திருவான்மியூர் பகுதிக்கு துரிதமாக செல்ல முடியும்.

சாலை திறந்தபோது, தெருவிளக்கு அமைக்கவில்லை. அதன் பிறகு, தற்போது வரை இங்கு தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவில் இந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. பகலில் தனியாக செல்லும் பெண்கள், இரவில் செல்ல அச்சப்படுகின்றனர்.

துரித பயணத்திற்காக சாலை திறந்தும், அதை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும், இரவில் சுதந்திரமாக செல்லும் வகையில், தெரு விளக்கு அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.