தீப பலன்கள்

0
197
  • நெய்தீபம் ஏற்றுவது லட்சுமி, குரு, அய்யப்பன், நரசிம்மருக்கு உகந்தது. நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும். நினைத்த காரியம் யாவும் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லைகள் தீரும்.
  • நல்லெண்ணெய் தீபம் சனீஸ்வரர் மற்றும் சரபேஸ்வரருக்கு உகந்தது. நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  • இலுப்பை எண்ணெய் துர்க்கைக்கு உகந்தது. இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வர, எதிரிகளால் ஏற்படும் பயம் விலகும்.
  • தேங்காய் எண்ணெய் கணபதிக்கு உகந்தது.
    இதனால் காரிய சித்தி, தேர்வில் வெற்றி உண்டாகும்.
  • வேப்பெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் அமைதியும் ஆனந்தமும் குடி கொள்ளும்.
  • தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், நெய் இந்த ஐந்தையும் ஒன்றாகக் கலந்து கோவில்களில் விளக்கேற்றினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.