தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு பிராமண சங்கம் நடத்திய வஸ்திர தானம் நிகழ்ச்சி…

0
168

நமது வேளச்சேரி விஜயநகரில் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு பிராமண சங்கம் நடத்திய வஸ்த்திர தானம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் திரு.பம்மல்ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டார். வேளச்சேரி தலைவர் திரு.முரளிதரன் அவர்கள் வரவேற்புரையுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது.

மாநில தலைவர் திரு. பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் 70 நபர்களுக்கு வஸ்திரம் வழங்கப்பட்டது. குருக்கள் பட்டாச்சாரிகள் மற்றும் மடப்பள்ளி பார்ப்பவர்கள் என 70 நபர்களுக்கு வஸ்திரம் கொடுக்கப்பட்டது. வஸ்திரம் வாங்க உதவிய உறுப்பினர் அனைவருக்கும் பிராமண சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் வேளச்சேரி பிராமண சங்க செயலாளர் திரு. பட்டாபிராமன் அவர்கள் நன்றி உரையாற்றி வஸ்த்திர தானம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.