தீபாவளியை முன்னிட்டு சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…

0
172

வேளச்சேரி விஜயநகர் சிவா விஷ்ணு ஆலயத்தில் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை சத்ரு சமஹார திரி சதி ஹோமம் நடைபெற்றது. 9ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ முருகன் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு சிவா விஷ்ணு ஆலயத்தில் ராமருக்கு மயிலிறகு மாலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் சாளி அலங்காரம் செய்து பூஜைகள் மற்றும் ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பூஜையில் பக்தர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாளுக்கு மாப்பிள்ளை சீர் எடுத்தல் பின் சாற்றுமுறை முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் 1.ரூ நாணயம் தாயார் கடாக்ஷமாக வழங்கப்பட்டது.