தீபம் அறக்கட்டளையின் 14ஆம் ஆண்டு கல்வித் திருவிழா…

0
114

தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சார்பாக 14ஆம் ஆண்டு கல்வி உதவி (1st Phase) 58 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு (விண்ணப்பித்தவர்கள், நேர்காணல் நடத்தப்பட்டவர்களுக்கு மட்டும்) கல்வி உதவி வழங்கும் விழா 23.07.23 (ஞாயிறு) அன்று காலை 10 am to 1 pm நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் தலைமை திரு S குமாரராஜா, ஸ்தாபகர், கிரீன் வேளச்சேரி, Thiru Balakrishnan founder and president deepam trust , சிறப்புரை திரு Sankar Business head ,Hitachi energy ஆகியேர் கலந்துகொண்டனர். ஏழை எளிய மாணவர்கள், தாய் தந்தை இழந்த மாணவர்கள், கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் உயர் கல்விக்காக, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும், சமுதாயம் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், தன்னை காட்டிக்கொள்ளாமல், நன்கொடைகளை கிள்ளி கொடுக்காமல், ஆயிரங்களாக, லட்சங்களாக, அள்ளி அள்ளி வழங்கும் 12 அருளாளர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். தொடர்ந்து 13 ஆண்டுகளாக 1200 ஏழை மாணவ மாணவிகளின் உயர் கல்விக்காக இதுவரை ரூபாய் 70 வழங்கப்பட்ட தீபம் அறக்கட்டளையின் கல்வி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும் தீபம் அன்போடு நன்றி தெரிவித்துகொண்டது.