Sunday, November 24, 2024

தீபங்களின் சிறப்புகள்

  • காலை மூன்று மணி முதல் ஐந்து மணிக்குள் தீபம் ஏற்றுவது வீட்டில் சர்வ மங்கள யோகத்தை உண்டாக்கும்.
  • குத்து விளக்கு மும்மூர்த்தி சொரூபம் ஆகும். வெள்ளி விளக்குகளை பயன்படுத்துவது மிகவும் விசேஷம்.
  • மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கினை தினந் தோறும் புதிதாகப் பயன்படுத்துவது பொன் விளக்கை பயன்படுத்துவதற்கு சமம்.
  • பித்தளை, தாமிரம், வெண்கலம் முதலிய கலப்பு உலோகங்களாலான விளக்குகளைப் பயன்படுத்தலாம். விளக்குகளை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்து பூவும், பொட்டும் இட்டு விளக்கேற்ற வேண்டும்.
  • பீங்கான் விளக்கை மட்டும் பயன்படுத்தவே கூடாது. குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றுவது மத்திமம். இரண்டு முகங்களில் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும். மூன்று முகம் ஏற்ற புத்திர சுகம் கிடைக்கும். நான்கு முகங்களை ஏற்ற கால்நடைச் செல்வம் பெருகும். ஐந்து முகங்களையும் ஏற்றினால் செல்வ வளம் செழிக்கும்.
  • விளக்கை வடக்குத் திசையில் ஏற்றி வழிபட்டால் நிறைவான பொருள் வசதி கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். அறிவு வளர்ச்சியடையும். விளக்கை கிழக்கு திசையில் ஏற்றி வழிபட்டால் துயரங்கள் அனைத்தும் விலகும். மேற்கு திசையில் விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையை நீக்குவதோடு விரோதங்களையும் போக்கும். ஆனால் எந்த நிலையிலும் தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுதல் கூடாது.
  • தீபச் சுடரில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

Latest article