Sunday, December 22, 2024

திருமண தடை நீக்கும் முருகர் பதிகம்…

ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு வகையான தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம்மிடம் அதிக அளவில் இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் குடும்பத்தோடு நிம்மதியுடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு முருகப்பெருமானின் அருள் என்பது வேண்டும். திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டாலோ, திருமணத்தில் தடைகள் இருந்தாலோ, திருமணம் விரைவில் நடைபெறாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தாலோ முருகப்பெருமானின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். 

அதிலும்  குறிப்பாக  பெண்களுக்கு திருமண  தடை  இருக்கும்  பட்சத்தில் அதற்கு செவ்வாய்  பகவானே  முழு  காரணமாக திகழ்கிறார்.   அதனால்   செவ்வாய் பகவானுக்குரிய  அதி  தேவதையான முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது பெண்களுக்கு இருக்கக்கூடிய திருமண தடைகள் விலகும் என்று கூறப்படுகிறது. அப்படி திருமண    தடை   விலகுவதற்கு முருகப்பெருமானை வழிபடும் முறையைப் பற்றிதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

திருமண தடை நீக்கும் முருகர் பதிகம் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமண வயது வந்தவுடன் நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்குரிய முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். திருமணம் செய்து வைத்தால்தான் அது நிறைவான குடும்பமாக இருக்கும். யேமலும் வம்சவிருத்தியும் ஏற்படும் என்று நினைக்காத பெற்றோர்களை இருக்க மாட்டார்கள். அப்படி முயற்சி செய்தும் பலருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தடைப்பட்டு விடும். திருமண வரன் அமையாமல் சென்று விடும். தாவரங்கள் ஏற்படும். இவை அனைத்தையும் நீக்குவதற்கு முருகப்பெருமானை வழிபடும் முறையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இதற்கு  முருகப்பெருமான்  வள்ளி தெய்வானையுடன் சேர்ந்து இருக்கக்கூடிய படம் வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். முருகப்பெருமானின் படத்தை வாங்கி வந்து சுத்தம் செய்து அவருக்கும், வள்ளி தெய்வானைக்கும் சந்தனம்    குங்குமம்   வைத்து கொள்ளுங்கள். பிறகு அவர்களுக்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் துவரம் பருப்பை பரப்பி அதற்குள் ஆறு அகல் விளக்குகளை வட்ட வடிவில் வைத்து, தீபம் அனைத்தும் உள்புறம் பார்த்தவாறு இருக்கும்படி வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு முருகப் பெருமானின் திருச்செந்தூர் திருப்புகழ் என்னும் நூலிலிருந்து திருமண தடை விலகுவதற்குரிய பதிகத்தை ஆறு முறை படிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் அசைவம் சாப்பிடாமல் இந்த தீபம் ஏற்றி வைத்த இந்த பதிகத்தை படிப்பவர்களுக்கு திருமணத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தடையாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகி விரைவில் திருமணம் கைகூடும். என்று கூறப்படுகிறது. 

திருமணத்தடை  உள்ள நபர்கள்தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆப்பொழுதுதான் விரைவிலேயே பலன் கிடைக்கும். அப்படி அவர்கள் செய்ய இயலாத பட்சத்தில் அவர்களுடைய பெற்றோர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம். திருமணம் நடைபெற்ற பிறகு பழமுதிர்ச்சோலை சென்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டால் விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

பதிகம்
விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிருந்து – வெயில் காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் – வசை கூற குறவாணர் குன்றி லுறை பாதை கொண் கொடி தான துன்ப – மயில்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த பெருமளே…

முருகப்பெருமானின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த பதிகத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் தீபம் ஏற்றி வைத்து படிப்பதன் மூலம் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானின் அருளால் விரைவிலேயே திருமணம் கைகூடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Latest article