Monday, December 23, 2024

திருமணத்தடை நீங்க மருதாணி பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையை திசை திருப்பக் கூடிய அற்புதமான செயலாக திருமணம் திகழ்கிறது. இரு மனங்கள் இணைந்து தங்கள் வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இந்த திருமணம் அதற்குரிய வயதில் நடந்தால்தான் அதனுடைய முழுமையான சிறப்பையும் உணர முடியும்.  

பலருக்கு    ஏதொ   ஒரு காரணங்களினால் அதற்குரிய வயதில் திருமணம்   நடைபெறாமல்  தள்ளிப் போகிறது.      அப்படிப்பட்டவர்கள் மருதாணியுடன் எந்த பொருளை சேர்த்து வைத்தால் திருமண தடை நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். 

மருதாணி என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஒரு செடியாக திகழ்கிறது.  அன்றைய  காலத்தில் நம்முடைய  முன்னோர்கள்  அவர்கள் கையில் என்றுமே மருதாணி இருப்பது போல் அடிக்கடி மருதாணியை அரைத்து வைத்துக்   கொள்வார்கள்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த அளவுக்கு பிரபலமாக இல்லை அதற்கு பதிலாக கெமிக்கல் நிறைந்த பொருட்களையே கையில்            வைத்து 

உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் எந்தவித பலனும் இல்லை.

மருதாணியை கைக்கு வைப்பதன் மூலம் நம் உடலுக்கு பல ஆரோக்கியங்கள் ஏற்படுகிறது  என்றாலும்  மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும் என்பது தான் உண்மை. அப்படிப்பட்ட     மருதாணியுடன்    எந்த பொருளை சேர்த்து வைத்து வழிபட திருமண தடை விலகும் என்று பார்ப்போம்.

யாருக்கு திருமண தடை ஏற்பட்டு இருக்கிறதோ அவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். மருதாணி இலைகளை பறித்து மைய அரைத்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமான அளவு தண்ணீர் ஊற்றி மருதாணியை  அரைக்க  கூடாது. மருதாணியுடன்  நாம்  வைக்கப்  போகும் பொருள்தான் ஜாதிக்காய்.

ஜர்திக்காயும்  ஈர்ப்பு  சக்தி மிகுந்த பொருளாக  திகழ்கிறது.  மருதாணி உருண்டைக்குள் ஒரு ஜாதிக்காயை வைத்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு  செய்ய  வேண்டும்.  இந்த மருதாணி  உருண்டை  அப்படியே மகாலட்சுமியின் பாதத்தில் ஒரு வாரம் வரை இருக்கட்டும்   . அடுத்த  வார வெள்ளிக்கிழமை  மறுபடியும்  இதே  போல் புதிதாக மருதாணியை அரைத்து அதில் ஒரு ஜாதிக்காயை   வைத்து  மறுபடியும் மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விட வேண்டும். 

பழைய மருதாணி உருண்டையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மூன்று வெள்ளிக்கிழமை முடிந்த பிறகு இந்த உருண்டைகளை அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மருதாணி இலைகளை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஜாதிக்காயை பொடி செய்து குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் திருமணம் தடைப்பட்டு   இருப்பது    சரியாகி விரைவிலேயே அவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும்.

மிகவும்   எளிமையான  இந்த பரிகாரத்தை     நம்பிக்கையுடன் செய்பவர்களின் வாழ்வில் இருக்கக்கூடிய திருமண தடைகள் அனைத்தும் நீங்கும்.

Latest article