தினை தேங்காய் பிஸ்கட்

0
146

தேவையான பொருட்கள்:
1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன் தினை மாவு
1/2 கப் + 1 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு
1/4 கப் + 1/4 கப் தேசிக்கேட்டர் கோக்கனட்
1/2 கப் பொடித்த வெல்லம் (அ) நாட்டுச்சர்க்கரை
சிறிதுஏலங்காய்தூள்
2 டேபிள்ஸ்பூன் முட்டை (அ) பால்
2 டீஸ்பூன் வெண்ணெய்
செய்முறை:
தினையை ஐந்து முறை நன்றாகக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு தண்ணீரை முழுவதும் வடித்து துணியில் படர்ந்து காய வைக்கவும்
ஈரம் முழுவதும் போன பிறகு மிக்ஸியில் பொடியாக அரைத்து சலித்து காற்றுப் புகாத டப்பாவில் வைக்கவும் தேவைப்படும் பொழுது
ஒரு பவுலில் மிருதுவான வெண்ணையை சேர்த்து நன்றாக 2 நிமிடம் கிளறவும் பிறகு வெல்லத்தை பொடி அல்லது மிக்ஸியில் ஒரு முறை அரைத்து இதில் சேர்க்கவும் இப்போது வெள்ளமும் வெண்ணையும் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்குமாறு 3 நிமிடம் கிளறவும்
பிறகு இதில் முட்டையை அல்லது பால் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும் பிறகு இதில் தினை மாவு, கோதுமை மாவு சேர்க்கவும்
தேசிக்கேட்டர் கோக்கனட் சேர்த்து அனைத்தையும் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசையவும் இவை சற்று தளர்வாக அல்லது தண்ணீர் போலவும் இருப்பதாக தோன்றினால் இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தினைமாவு அதே அளவு கோதுமை மாவு சேர்த்துப் பிசையவும் படத்தில் காட்டியவாறு மாவு மிருதுவாகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்
உருண்டையை எடுத்து உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும் பிறகு இதனை தேசிக்கேட்டர் கோக்கனட் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்
அகலமான பாத்திரத்தில் உப்பு அல்லது மணல் சேர்த்து 15 நிமிடம் பிரீ ஹிட் செய்யவும்… ஒரு தட்டின் மேல் பட்டர் சீட்டு வைத்து தயாரித்து வைத்திருக்கும் பிஸ்கட்டை சற்று இடைவெளி விட்டு வைக்கவும் பிறகு இதனை 15-20 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்
இதே போல் அனைத்தையும் தயாரித்து கொள்ளவும். சுவையான ஆரோக்கியமான தினை தேங்காய் பிஸ்கட் தயார்.