திங்கட்கிழமை விரதம் அனுஷ்டித்தால் தீரும் பிரச்சனைகள்!
- திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள். கூடவே திங்கட்கிழமையை சோமவாரம் என்கிறோம். சிவன் வழிபாட்டுக்கும் சோமவாரம் விரதம் இருப்பது மிக நல்லது. அதிலும், இந்த திங்கட்கிழமை அன்று பௌர்ணமியும் சேர்ந்து கொள்வது எத்தனை விசேஷம் தெரியுமா?
- சிவன் எப்படி சோமன் ஆனார் தெரியுமா? சோமன் என்று பெயர் சிவனுக்கு உரியது. சந்திரனை முடிசூடிக் கொண்டவர் சிவன். அப்படி சந்திரனை முடிசூடிக் கொண்ட சிவன், சேலத்தில் உள்ள ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். சர்வலோக நாயகி சமேத சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர். இந்த பெயர் உலகத்தில் எந்த சிவனுக்கும் கிடையாது. இந்த ஆசிரமத்தில் உள்ள சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர் பீடத்தில் 12 ராசிகளை அமைத்து அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- இவர் எமதர்மரின் திசையான தெற்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இந்த சிவனை வழிபட்டால் எமபயம் நீங்கும். சிவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வங்கள் கிடைக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் வழக்குகளில் வெற்றி வியாபாரம் அபிவிருத்தி அடைவார்கள்.
- சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவத்தையும் தீரும், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும், 1000 பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். கோடி தானம் செய்த பலன் கிடைக்கும். காசியில் குடியேறி வாழ்ந்த பலன் கிடைக்கும். பாடசாலைகள் அமைத்த பலன் கிடைக்கும். வேள்விகள் செய்த பலன் கிடைக்கும். ஸ்வர்ண (தங்கம்) தானம் செய்த பலன் கிடைக்கும். வில்வார்ச்சனை செய்வதால் கோடி புண்ணியம் கிடைக்கும். வில்வார்ச்சனை செய்வதால் சிவலோகத்தை அடையும்.
- திங்களன்று ஆகாரம் ஏதுமின்றி உபவாசம் இருந்து சர்வ தோஷ நிவர்த்தீஸ்வரரை கிரிவலம் வந்தால் நீங்கள் மனதில் எண்ணிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.