தாம்பூலம் தட்டு தானம் பலன்கள்

0
177

தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அதை யார் கையில் செய்தால் என்ன. ஆண்கள் கொடுத்தாலும் அது தானம் தான். பெண்கள் கொடுத்தாலும் அது தானம் தான். அது என்ன பெண்களுக்கு என்று தனியாக ஒரு சிறப்பு. ஆண்களை ஒப்பிடும்போது எப்போதுமே பெண்களுக்கு ஒரு தனி சிறப்பு தான். பெண்கள் கையால் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமும் பல மடங்காக விருத்தி அடையும். ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் இந்த பூமியில் இன்னொரு உயிரை படைக்க கூடிய சக்தி உள்ளது. பெண்கள் கையால் செய்யக்கூடிய காரியம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. இதனால் தான் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அதை வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். இதன் அடிப்படையில் தான் இன்றைக்குக்கான பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது. பின் சொல்லக் கூடிய தானத்தை உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் தீரும். குறிப்பாக உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்கும். பெண் குழந்தைகள், தாய், மனைவி, தங்கை, இப்படி எந்த ஸ்தானத்தில் உங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்களோ அவர்கள் கையால் இந்த தானத்தை செய்யலாம். முதலாவதாக சொல்லப்பட்டுள்ள தானம்மங்களப் பொருட்கள் தானம். ஆதாவது சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள் கயிறு, மை டப்பா, குங்குமம், மஞ்சள் என்று ஒரு செட்டாக போட்டு சிறிய கவரில் பேக் செய்து இப்போது நமக்கு கிடைக்கிறது. இந்த பொருட்களை வாங்கி வெற்றிலை பாக்கின் மேல் வைத்து அப்படியே சுமங்கலி பெண்ணுக்கு தானமாக கொடுக்க வேண்டும். எத்தனை பேருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம். அதாவது வெற்றிலை பாக்கு பூ பழம் வைத்து தானம் கொடுப்பது என்பது வேறு. கட்டாயமாக இந்த தாம்பூலத்தில் முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி, சீப்பு, கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் மை, மஞ்சள் கயிறு இந்த பொருட்கள் இருக்க வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை மேல் சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக வைத்து சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுத்தால் உங்கள் குடும்பம் லட்சுமி கடாட்சத்தோடு இருக்கும். குறிப்பாக ஆடி மாதம் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் இந்த தானத்தை செய்வது சிறப்பு. கண்ணாடியை தானம் செய்தால் வீட்டில் இருக்கும் பெண்கள் முக ராசியாக மாறுவார்கள். கண்ணாடியை தனியாக தானம் கொடுக்க முடியாது. இப்படி தாம்பலத்தில் வைத்து தான் கொடுக்க வேண்டும். வீட்டு பெண்களின் கையால் நெல்லிக்காய் தானத்தை செய்வது வீட்டிற்கு அத்தனை லக்ஷ்மி கடாட்சத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த நெல்லிக்காய்களை அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இந்த நெல்லிக்காய் தானத்தை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை இந்த தானத்தை செய்வது மிகவும் சிறப்பு. ஏன்னதான் முயற்சி செய்தாலும் சில வீட்டில் குண்டுமணி தங்கம் கூட நிற்காது. அடகு கடைக்கு செல்லும். சில பேர் என்னதான் முயற்சி செய்தாலும் குண்டுமணி தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். பணம் காசு என்னவோ இருக்கும். ஆனால் தங்கம் வாங்கக்கூடிய யோகம் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் ஒரு சிறு குண்டுமணி தங்கத்தை வாங்கி கோவிலில் இருக்கும் பிராமணருக்கு தானமாக கொடுங்கள். தங்கம் வாங்குவதில் இருக்கும் தோஷம் விலக இந்த தங்க தானம் சிறந்ததொரு நல்ல பலனை கொடுக்கும். இந்த தானத்தையும் வீட்டில் இருக்கும் பெண்கள் கையாலேயே செய்யலாம். முந்திரிப் பருப்பை கோவிலுக்கு எடுத்து சென்று நிவேதனம் செய்து, அந்த முந்திரி பருப்பை கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு தானமாக கொடுத்தால் உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கு அடங்காத சொல்பேச்சு கேட்காத பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்த இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நும்பிக்கை உள்ளவர்கள் தேவையான போது மேல் சொன்ன தானத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.