தரித்திரம் நீங்கி செல்வம் பெருக பரிகாரம்

0
101
     ஒருவருடைய வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். நினைத்த உடனே மகாலட்சுமியின் அருள் கிடைத்து விடாது. நம்மிடம் இருக்கக்கூடிய தரித்திரம் நீங்கினால் தான் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். தரித்திரம் நம்மிடம் இருக்கும் பட்சத்தில் நமக்கு கடன் பிரச்சினைகள் அதிகரிக்கும், உடலாலும் மனதாலும் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும், ஒரு  சிலருக்கு    சாப்பிடுவதற்கு கூட உணவில்லாமல் கஷ்டப்படுவார்கள். இப்படி இருக்கும் நிலை மாறி மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு செய்யக்கூடிய சில பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

தரித்திரம் நீங்கி செல்வம் பெருக பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் லட்சுமி கரமாக நம்முடைய வீட்டை நாம் மாற்ற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நமக்கு கடன் பிரச்சினை தீரவும், அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கவும் பல பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரங்களில் மிகவும் எளிமையான அதே சமயம் நல்ல பலனை தரக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். முதலில் நம்மை பிடித்திருக்கும் கஷ்டங்கள் நீங்குவதற்கு கடன் பிரச்சினை தீருவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை தெரிந்து கொள்வோம். இந்த பரிகாரத்தை நாம் புதன்கிழமை அன்று செய்வது என்பது சிறப்பு. மற்ற நாட்களிலும் செய்யலாம். அதில் எந்த தவறும் கிடையாது. செவ்வாய்க்கிழமை அன்று இரவே ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வெல்லத்தை நுணுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை இரண்டையும் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். புதன்கிழமை அன்று காலையில் அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு இதை தானமாக தரவேண்டும். பாசிப்பருப்பு தர முடியாது என்பவர்கள் பாசிப்பருப்பிற்கு பதிலாகவும் பச்சரிசியை பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும்.

அடுத்ததாக சாப்பாட்டிற்கு எந்தவித குறையும் இல்லாமல் இருக்க அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைப்பதற்கு வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் சிறு சிறு கிண்ணங்களில் எடுத்து மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதில் முக்கியமாக பச்சரிசி, கல்லுப்பு, துவரம் பருப்பு, வீட்டில் இருக்கக்கூடிய காய்கறிகள், வீட்டில் இருக்கக்கூடிய பழ வகைகள ; என்று அனைத்தையும் சிறிது மட்டும் எடுத்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்து முடித்த பிறகு இதை திரும்பவும் நாம் எப்பொழுதும் பயன்படுத்துவது போல் பயன்படுத்திக் கொள்ளலாம். சேல்வ வளம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய நிலை வாசலில் மருதாணி இலையை வைக்க வேண்டும். மருதாணியை கொப்பாக உடைத்து வந்து அதை அப்படியே நிலை வாசலில் மாட்டி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் செல்வ வளம் என்பது அதிகரிக்கும். இதோடு மட்டுமல்லாமல் பூஜை அறையில் பஞ்ச பாத்திரம் வைத்திருப்போம் அல்லவா அந்த பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் சிறிதளவு பச்சை கற்பூரம், இரண்டு கிராம்பு, இரண்டு துளசி இலைகளை சேர்த்து வழிபாடு அனைத்தும் செய்து முடித்த பிறகு இந்த தீர்த்ததை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பணம் நகை வைத்திருக்கும் இடத்திலும் தெளிக்க வேண்டும்.

தரித்திரம் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிவப்பு நிற துணியை எடுத்து அதில் சிறிதளவு பச்சரிசி, ஒரு கொட்டைப்பாக்கு, சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய குங்குமம் சிறிதளவு வைத்து மூட்டையாக கட்டி பூஜை அறையில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். ஒரு வருடம் கழித்து இந்த மூட்டையை எடுத்துக்கொண்டு போய் ஓடுகின்ற நீரிலோ கடலிலோ தூக்கி போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மை பிடித்த தரித்திரம் அனைத்தும் நீங்கும். இதையும் படிக்கலாமே:வினைகளை தீர்க்கும் ஆவணி வெள்ளி வழிபாடு இந்த பரிகாரங்கள் அனைத்தையும் செய்வதும் நல்லது அல்லது இதில் எதை உங்களால் செய்ய முடியுமோ அதை முழு மனதோடு செய்துவர உங்களுடைய தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் என்பது அதிகரிக்கும்.