தரமணி, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்…

0
200
   சென்னை     வேளச்சேரி-தாம்பரம் சாலையில் மடிப்பாக்கம் விரிவான   குடிநீர்   வழங்கல் திட்டத்திற்கான இணைப்பு பணி, நெம்மேலியில்   உள்ள  கடல்நீர் சுத்திகரிப்பு குடிநீர் குழாய் இணைப்பு பணி மற்றும் வெட்டுவான் கேணி தேவாலயத்திற்கு      எதிரில் துரைப்பாக்கம்  திட்ட   இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.         இதன்      காரணமாக சனிக்கிழமை 25-ந்தேதி காலை 6 மணி முதல் 26-ந்தேதி காலை 9 மணி வரை பகுதி 13, 14    மற்றும்   15-க்கு  உட்பட்ட பகுதிகளில்  குடிநீர்  வினியோகம்        நிறுத்தம்     செய்யப்படுகிறது.    ஆடையாறு   பகுதிக்கு  உட்பட்ட தரமணி,   கோட்டூர் கார்டன், ஆர்.கே.மட்டம்   தெரு,     வேளச்சேரி   இந்திரா   நகர், பெருங்குடிக்கு   உட்பட்ட       கொட்டிவாக்கம், பாலவாக்கம்,     பெருங்குடி, பள்ளிக்கரணை,     மடிப்பாக்கம், புழுதிவாக்கம்   பகுதியில்  குடிநீர் வராது.   மேலும்    ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, வெட்டுவான் கேணி,     சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி,  ஒக்கியம்- துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீர் சப்ளை நிறுத்தப்படுகிறது.  
   எனவே    பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு   குடிநீரை  சேமித்து வைத்துக்     கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். 
   மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள்    மற்றும்   தெரு நடைகளுக்கு   லாரிகள்   மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல்     சீரான   முறையில் வழங்கப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.