Monday, December 23, 2024

தரமணி மேம்பால ரயில் நிலைய ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு…

சென்னை, – தரமணி மேம்பால ரயில் நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால் விஷமிகளால் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. சுவர் விரிசல்களில், மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன.

சென்னை கடற்கரை – வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில், தரமணி ரயில் நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால், நகரும் படிக்கட்டுகள் இயங்கவில்லை. இரவு நேரத்தில் சாலையில் செல்லும் விஷமிகள், கம்பி ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைப்பது, சிமென்ட் ஜன்னல்களை கட்டைகளால் வீசி உடைப்பதும் தொடர்கிறது.

நிலையத்தின் மேற்கூரையில், பல இடங்களில் சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்துள்ளது. சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல்களில் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் இரவு நேரத்தில், கட்டட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதும் தொடர்கிறது. அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Latest article