தரமணி – பெருங்குடி சாலையோரம் குப்பை கழிவுகள்…

0
165

தரமணி-வேளச்சேரி இடையே போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக, மேம்பால ரயில் நிலையத்தை ஒட்டி இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இச்சாலை பணியை கிடப்பில் போட்டதால், போக்குவரத்து குறைவாக இருந்த காலத்தில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.

தற்போது, சாலைப்பணி முடித்து போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தினசரி ஏராளமான இரு, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இரவு நேரத்தில் லாரிகள் மூலம் கழிவு நீரும் கொட்டப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சியினர் சாலையோரம் உள்ள குப்பையை முழுமையாக அகற்ற வேண்டும். கழிவுநீர் கொட்டாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.