Tuesday, December 24, 2024

தங்கம் வாங்க வேண்டும் என நினைத்த உடனே தங்கம் வாங்கும் யோகம் கிடைக்க வியாழக்கிழமையில் இந்த மரத்தடியில் பூஜை செய்தால் போதும். வீட்டில் தங்கம் கிடுகிடுவென மலை போல குவிய தொடங்கி விடும்….

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதற்கான விலை அதிகரிக்க அதிகரிக்க தான் அதற்கான மதிப்பும் அதிகரிக்கும். அந்த வகையில் தங்கம் என்று விலை எங்கோ விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டு செல்கிறது. ஆனால் தங்கம் வாங்கி சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும்    இப்போது    தான் அனைவரிடத்திலும்      அதிகரித்து வருகிறது. இப்படி வாங்க வேண்டும் என்று நினைத்த எல்லோராலும் தங்க நகை வாங்க முடியுமா என்ன? அதற்கான ஒரு யோகம் வர வேண்டும் அப்படியான யோகத்தை  வரவழைத்து கொடுக்கக் கூடிய  ஒரு அற்புதமான   எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தங்கம் சேர பரிகாரம் இந்த தங்க நகையை வாங்கி சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கத் தான் செய்கிறது. இதை பேராசை என்றெல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது. தங்க நகை என்பது சொத்து சேர்ப்பது என்ற நிலை தான் இப்போது உள்ளது. முன்பெல்லாம் தங்க நகை ஒரு அழகியல் சார்ந்த விஷயமாக மட்டும் இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை அவசர   காலத்தில்  உதவும்  ஒரு மதிப்பிற்குரிய பொருளாகவும் உள்ளது.

இந்த   பரிகாரத்தை  நீங்கள் வியாழக்கிழமை   அன்று  காலையில் உணவருந்துவதற்கு முன்பாக செய்துவிட வேண்டும். இதற்கு நமக்கு தேவையானது வாழைமரம் இருக்க வேண்டும். அது நம் வீட்டில்   இருந்தாலும் சரி அல்லது மாடித்தோட்டம் ஒருவேளை வாழைத் தோட்டம் இருக்கும் இடத்திற்கு சென்று செய்யலாம் ஆனால் வாழை மரத்தடியில் தான்   இந்த   பரிகாரத்தை   செய்ய வேண்டும். 

இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு விஷ்ணு பெருமாள் மகாலட்சுமி தாயார் உடன் இருக்கும் ஒரு படம் நிச்சயம் தேவை. இதை வாழ மரத்தடியில் ஒரு மனை அல்லது துணி போட்டு அதன் மேல் இந்த படத்தை வைத்து அதற்கு முன்பாக கடுகு எண்ணெய் ஊற்றி இரண்டு அகல் தீபம் ஏற்ற வேண்டும். ஏதேனும் ஒரு எளிய நெய்வேத்தியத்தை செய்து படைத்த பின்பு ஓம் நமோ நாராயணாய என்ற இந்த மந்திரத்தை ஜெபித்து வணங்க வேண்டும்.

இப்படி  வணங்கும்  பொழுதே உங்களுக்கு தங்கம் வாங்க வேண்டிய யோகம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு வேலை கையில் இருக்கும் தங்கம் அழகில் இருந்தாலும் அல்லது தங்கம் வாங்க பணமே இருந்து வாங்க முடியவில்லை என்றாலும் அனைத்து விதமான சொன்ன தோஷங்களையும் இந்த பரிகாரம் நீக்கி விடும்.

இன்றைய காலத்திலும் கூட ஒரு போட்டு தங்கம் கூட வாங்க முடியாத எண்ணற்றோர்    இருக்கத்   தான் செய்கிறார்கள் அப்படி ஆனவர்கள் கூட இந்த வழிபாடை மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து வரும்பொழுது அவர்கள் தங்கம் வாங்குவதற்கான யோகம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து தங்க நகையை அதிக அளவில் சேர்த்து மகிழ்ச்சியாக  வாழுங்கள்.

Latest article