Wednesday, December 25, 2024

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா சிறப்பு கொண்டாட்டம்…

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 74,வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உழவர்தினத்தை முன்னிட்டு விவசாயி ஒருவரை தேசிய கொடியை ஏற்றிவைக்க முடிவுசெய்யபட்டது.

பொன்மார் செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயம் செய்து வரும். திரு.S.மணி வயது 70 அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டது. அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தார்கள் அவரின் துணைவியார் திருமதி. புஷ்பவல்லி அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் சிறப்புவிருந்தினராக திரு. R. பாலாஜி அவர்கள் உதவி ஆணையர் Urban Land Tex காஞ்புரம் மாவட்டம் கலந்து கொண்டார்கள்.

நலச்சங்கம் சார்பாக கோலப்போட்டி மாணவமாணவிகளுக்கு திருக்குறள் பார்க்காமல் ஒப்புவித்தல் போட்டிகள் வைக்ப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். தேசியகீதம் பாடப்பட்டு இனிப்புகள் மற்றும் காலை சிற்றுணவும் வழங்கப்பட்டது. விழா இனிதே நிறைவடைந்தது.

Latest article