டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக புனித அந்தோனியார் பள்ளியில் படிக்கும் ஏழைஎளிய மாணவிகள் 60 பேரை கல்விக்காக தத்தெடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்விகட்டணத்தை செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மேற்கண்ட மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், சுவாமி விவேகானந்தரின் 160, வது பிறந்த தினம் மற்றும் நெகிழியை தவிர்க்க வேண்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் வேளச்சேரி தீயணைப்புதுறை அதிகாரிகள், South Indian Bank Velachery Branch அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன மற்றும் அனைவருக்கும் மதிய உணவுவழங்கப்பட்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.