Friday, December 27, 2024

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக கல்வி உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சி…

டான்சி நகரில் உள்ள புனித அந்தோனியார் தொடக்ப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 11-07-2022 அன்று கல்வி உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சி டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக நடைபெற்றது . அந்த பள்ளியில் ஏழை எளிய மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களில் தாய் மற்றும் தந்தையை இழந்த மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை வழங்க நல சங்கத்தில் முடிவு செய்யப்பட்டு நான்கு, மற்றும் ஜந்தாம் வகுப்பு படிக்கும் ஜம்பது மாணவிகளை கல்விக்காக கடந்த ஆண்டு தத்தெடுக்கபட்டு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த மாணவிகளை 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவி தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன் படி இந்த ஆண்டுக்கான ஜந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை (ரூபாய் ஒரு லட்டச்சத்து ஜந்தாயிரம்) வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி ஒவ்வொறு ஆண்டும் தத்தெடுத்த மாணவிகளின் அவர்களின் பிறந்த நாளைக்கு அவர்களை நேரில் அழைத்து வாழ்த்துக் தெரிவித்து புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்படுகிறது. பன்னிரென்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு உதவிகள் செய்யப்படும் என்னபதை தெரிவித்துக் கொண்டனர். மேற்கண்ட மாணவிகளை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து உதவிகள் செய்வோம் என்று கூறினர்.
அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திர்களாக திரு.P.மணிமாறன்;, மாமன்ற உறுப்பினர் 177 வார்டு அவர்களும், திருமதி.சு.நித்யந்தினி;,உதவிபொறியாளர் சென்னை குடிநீர் வாரியம் வேளச்சேரி அவர்களும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு கல்வி உதவிதொகையை வழங்கினார்கள். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கல்வி உதவி தொகையை வழங்கி உதவுபவர்களுக்கு சங்கத்தின் சார்பாகவும் பள்ளியின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Latest article