டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 44வது சர்வதேச சதுரங்க போட்டி துவங்குவதை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி…

0
101

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 28-07-2022 மகாபலிபுரத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியை முதன் முதலில் சென்னையில் துவங்குவதை முன்னிட்டு அதை வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 32, பேர் கலந்து கொண்டார்கள். சதுரங்க போர்டு போல 15-15 அடி அகலத்தில் 32, கட்டங்கள் வரையப்பட்டு 32, மாணவ, மாணவிகளை அந்த கட்டத்தில் நிற்க வைக்கப்பட்டு செஸ் காயின்ஸ் போல அட்டையில் அமைத்து 32, மாணவர்களிடம் வழங்கப்பட்ன. பின்பு செஸ் விளையாட்டு போட்டி விளையாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி.மரியஜோதி அவர்களும் தயா இன்டர்நேசனல் பள்ளியின் தாளாளர் திருமதி.கவிதா பால் வண்ணநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.