Monday, December 23, 2024

ஜூம் ஸ்பார்க் 2022 – டேலி (TALLY) பயிற்சி வகுப்பு…

சென்னை குருநானக் கல்லூரியில் பி.காம்(சிஏ) துறையின் சார்பில் “ஜூம் ஸ்பார்க் 2022 – டேலி பயிற்சி வகுப்பு” தொடக்க விழா 11.04.2022 அன்று நடைபெற்றது. பயிற்சி வகுப்பின் தொடக்கமாக கல்லூரி முதல்வர் டாக்டர் மா. கு. இரகுநாதன் அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தொடக்க உரை வழங்கினார். இப்பயிற்சி வகுப்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் எம். கவிதா அவர்கள் டேலி (TALLY) முக்கியத்துவமும் இன்றைய தொழில்நுட்ப துறைகளில் டேலியின் பயன்களையும் மாணவர்களுக்கு

விளக்கினார். மேலும் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்வின் தொடக்கமாக, பி.காம்.(சிஏ) துறைத் தலைவர் டாக்டர் வி.தேவி வரவேற்புரையும் பயிற்சி வகுப்பின் அவசியமும் எடுத்துரைத்தார். கல்லூரி துணை முதல்வர் (சுழற்சி-2) டாக்டர் என். சி. இராஜஸ்ரீ, தொழில்நுட்ப துறையின் டீன் பேராசிரியர் நிர்மலா தேவி ஆகியோர் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Latest article