Monday, December 23, 2024

சொத்து பிரச்சனை, கடன் பிரச்சனையில் இருந்து விடுபட கிராம்பு பரிகாரம்

உங்களுக்கு இருக்கக்கூடிய சொத்து பிரச்சனை,  பண  பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கு   எளிமையான  ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து  கொள்ள   போகின்றோம். குலதெய்வத்தை நினைத்து இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்பவர்கள் நிச்சயம் அந்த பிரச்சனையிலிருந்து வெளிவரலாம். சவால் விட்டு சொல்லலாம். 
இத்தனை நாட்களுக்குள் கடனை திருப்பித் தருகின்றேன் என்று, இத்தனை நாட்களுக்குள் சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு  வரும்  என்று, இத்தனை நாட்களுக்குள் கோர்ட் கேஸ் வழக்குகள் எனக்கு சாதகமாக அமையும் என்று, அந்த அளவுக்கு ஒரு நம்பிக்கையும் வெற்றியையும் தேடி தரக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்மீகம் பரிகாரம் இது.
ஒன்றுமே கிடையாதுங்க. நீங்க அந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையிடும்போது, இந்த பொருளை மட்டும் உங்களுடைய கையில் எடுத்துச் செல்ல வேண்டும். அது என்ன பொருள் அதை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். 
சொத்து    பிரச்சனை   பண பிரச்சனையிலிருந்து வெளிவர பரிகாரம் ஒரு கோர்ட்டு கேஸ் வழக்குக்காக போறீங்க. அந்த கேஸ் உங்கள் பக்கம் ஜெயித்தால் நிறைய பணம் கிடைக்கும். அந்த பணத்தை வாங்கி உங்கள் கடனை எல்லாம் அடைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம். கடன் கொடுத்தவனோ, கடனை திருப்பித் தரச் சொல்லி நிறைய பிரச்சனைகளை கொடுக்கின்றான்.  
கோர்ட் கேஸ் வழக்கோ இழுப்பறியாக செல்கிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வீட்டிலிருந்து இன்று வெளியே கிளம்ப போறீங்க. அப்போது இந்த பரிகாரத்தை செய்யணும். மொட்டோடு இருக்கக்கூடிய பெரிய அளவில் இருக்கும் 9 கிராம்பு எடுத்துக்கோங்க. சதுர வடிவில் ஒரு கருப்பு நிற துணியை எடுத்துக்கோங்க.        அதில் இந்த ஒன்பது கிராம்பை வைத்து கருப்பு நூலில் முடிச்சாக கட்டி உங்களுடைய மணி பர்ஸ் அல்லது பாக்கெட் எதில் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து இந்த முடிச்சை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்புங்கள். 
உங்களுக்கு எந்தெந்த பிரச்சனை இருக்கிறதோ அதை எல்லாம் சரி செய்ய தேவையான முயற்சிகளை எடுக்கலாம். கோர்ட்டுக்கு   போகலாம்,   போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம், நமக்கு கடன் கொடுத்து டார்ச்சர் செய்கிறார் அல்லவா, அவரை பார்க்க போய் அவருக்கு சமாதானம் பேசலாம். இப்படி நீங்கள் செய்யக்கூடிய வேலையில் உங்கள் கையில் இந்த ஒன்பது கிராம்பு கருப்பு துணியில் இருக்கட்டும். 
படாத பாடு பட்டு வீடு திரும்புகிறீர்கள். வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்கு வெளியே ஒரு கட்டி கற்பூரத்தை சின்ன தட்டில் வைத்து கொளுத்தி, அதில் கருப்பு துணியில் இருக்கும்   ஒன்பது  கிராம்பை  அந்த துணியோடு நெருப்பில் போட்டு விடுங்கள். உங்களை பிடித்த பீடையெல்லாம் அந்த நெருப்பிலேயே எரிந்து பொசுங்கட்டும்.
மீண்டும் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ அல்லது பத்து நாள் கழித்தோ இதேபோல பிரச்சனையை சரி செய்ய கிளம்பும்போதும் இந்த கிராம்பை மேல் சொன்னபடி உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். மீண்டும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அந்த கிராம்பை நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் உங்களுடைய சொத்து பிரச்சனை பண    பிரச்சனையில்   இருக்கும் வில்லங்கங்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து     கோர்ட்    கேஸ்    வழக்குகள் உங்கள்     பக்கம்     சாதகமாக   தீர்ப்பாகி, பணம்   உங்கள்  கைக்கு  வந்து  கடன் பிரச்சனையை  சரி  செய்து  விடுவீர்கள்.     நியாயம் உங்கள் பக்கம் இருக்கிறது என்றால்  இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு    ஒரு  சில  நாட்களில்  பலன் தரும் பலன்.   இது ஒரு எளிமையான தாந்திரீக            பரிகாரம்.      குலதெய்வத்தை    வேண்டி   செய்து பாருங்களேன்.   ஒன்பது   கிராம்புக்கு லட்சக்கணக்கில்  செலவு  ஆகப்போவது. கிடையாது, வெற்றி கிடைத்தால் நிம்மதி உங்களுக்கு கிடைக்கும்.

Latest article