Monday, December 23, 2024

சேமியா கேசரி!

தேவையான பொருட்கள்:


சேமியா – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
நெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
குங்குமப்பூ – 1 சிட்டிகை
கேசரி பவுடர் – 1 சிட்டிகை
முந்திரி – சிறிது


செய்முறை:

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதே வாணலியில் மீண்டும் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், சேமியாவை சேர்த்து, நீர் வற்றி சேமியா நன்கு வெந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, குங்குமப்பூ மற்றும் கேசரிப் பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
  • பின்பு அதில் நெய் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் முந்திரி சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான சேமியா கேசரி ரெடி.

Latest article