Monday, December 23, 2024

செவ்வாய் கிழமையும்… பங்குனி தேய்பிறை பிரதோஷ விரதமும்…

  • இந்த பங்குனி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.
  • பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும்.
  • நவகிரக சந்நிதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி, பீட்ரூட் சாதம் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
  • வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு பீட்ரூட் சாதம், கேசரி போன்றவற்றை அன்னதானம் வழங்கலாம்.
  • இம்முறையில் இன்றைய பங்குனி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் உங்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷ பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
  • நேரடி, மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும். உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் நீங்கி உடல் பலம் கிட்டும். மனோதைரியம் உண்டாகும்.

Latest article