சென்னை மேல்நிலைப்பள்ளி வேளச்சேரியில் நடைபெற்ற கரும வீரர் காமராஜர் பிறந்த நாள் விழா…

0
272

177 வது வார்டு வேளச்சேரி ராஜலட்சுமி நகரில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் கரும வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் 2022 – 2023 ஆம் ஆண்டில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர்க்கு 177 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.பெ.மணிமாறன் MA.MC அவர்கள் ஊக்க தொகை மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கு பரிசு வழங்கினார். இந்நிகழ்வில் வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் திரு.அரிமா சு.சேகர், 178 வது மாமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பாஸ்கரன், 176 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.வே.ஆனந்தன், டான்சி நகர் நல்வாழ்வு சங்க செயலாளர் திரு.பாலகிருஷ்ணன், அன்னை இந்திரா நகர் நல்வாழ்வு சங்க தலைவர் திரு.குமாரராஜா, தண்டீஸ்வரர் நகர் நல்வாழ்வு சங்க தலைவர் T.ஐவன்ஸ் , மீசை ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பெரும் திரளான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.