சென்னை மாநகராட்சி மற்றும் வேளச்சேரி விஜயநகர் நலவாழ்வு சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்…

0
173

நமது வேளச்சேரி விஜயநகரில் சென்னை மாநகராட்சி (சுகாதார துறை) மற்றும் வேளச்சேரி விஜயநகர் நலவாழ்வு சங்கமும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் (Covishield / Covaxine – Vaccine) தடுப்பூசியை, விஜயநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 26ஆம் தேதி வியாழன் கிழமை அன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்பட்டன. உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி (Mobile) கொண்டு வந்து இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். கொரோனா தடுப்பூசி முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் என 360 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.