சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்…

0
194
சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். 

சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக அங்கிருக்கும் வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வு குறித்து தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவில்லை. 

சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தங்களது பணிகள் காரணமில்லை என மெட்ரோ ரெயில் ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.