சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் திறந்தவெளியில் மின்சார ரெயில் பெட்டி கண்காட்சி …

0
155
             சென்னை  மாநகரின்  முக்கிய அடையாளமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் திகழ்கிறது. இங்கு பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. சென்ட்ரலில் மெட்ரோ, மின்சார ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் அனைத்தும் உள்ளன. இங்கு வரும்  பயணிகளுக்காக  பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சென்ட்ரல் சதுக்கம் பயணிகளிடம் வரவேற்பு பெற்று உள்ளது. நடைபாதைகள், ஓய்வு இருக்கைகள், சுரங்க நடைபாதைகள், புல்வெளிகள் ஆகிய பல்வேறு வசதிகளை பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளை கவரும் வகையில் மின்சார ரெயில் பெட்டி ஒன்று  பயணிகள்  பார்வைக்குகண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. சென்ட்ரல் விரைவு ரெயில் நிலையம் மற்றும் புறநகர் மின்சார ரெயில் நிலையங்களுக்கு இடையே திறந்த வெளியில் தண்டவாளம் அமைத்து அதன் மேல் இந்த மின்சார ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை இது கவர்ந்து வருகிறது. ரேயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆர்வத்துடன் இதனை பார்த்து செல்கிறார்கள். சுிலர் ரெயில் பெட்டி அருகே நின்று 'செல்பி' புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.