Sunday, December 22, 2024

சுங்கக்கட்டண உயர்வு – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்…

                   தமிழகத்தில்  உள்ள 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.    தேசிய நெடுஞ்சாலைகள்    ஆணைய ஒப்பந்தப்படி, கடந்த ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள 42 சுங்கச் சாவடிகளில்      கட்டணம் உயர்த்தப்பட்டது.    இந்நிலையில் தமிழ்நாட்டில்   மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளில்     நள்ளிரவு முதல்        சுங்கக்கட்டண    உயர்வு அமலுக்கு     வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.           விக்கிரவாண்டி, கொடைரோடு,   மணவாசி, மேட்டுப்பட்டி,   மொரட்டாண்டி, செங்குறிச்சி    உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் தற்போது கட்டண உயர்வு அமலாகியுள்ளது. வாகனத்தின் வகையை பொறுத்து 5 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கட்டணம்   உயர்த்தப்பட்டு இருப்பதாக   கூறப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.    இதனால் அத்தியாவசிய    உணவு பொருட்களின் விலை, லாரிகளின் சரக்கு கட்டணம் உள்ளிட்டவை உயரும்  என  எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டுமென லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest article